Selvi Nithianandan

வேள்வி
பாரினில் வேள்வி
பலமாய் என்று
பலியாக்கி உண்ணும்
பலரும். உண்டு
பாவம் புண்ணியம்
எங்கும் முண்டு
படைத்தவன் படைப்பும்
உயர்வு வென்று

விடுதலை வேள்வியில்
நினைவின் இழப்பு
வீரர்கள் ஆத்மார்த்த
வேங்கையாய் இறப்பு
வீரமே மண்ணின்
மேலான சிறப்பு
வியூகமும்வேங்கையாய்
விதையான பொறுப்பு

உலகிலே யாகமாய்
பேரிழப்பு
உயிரையே மதிப்பதே
கணிப்பு
உதிரமும் வெள்ளமாய்
கிடப்பு
உய்து உணர்தலே
உளமது சிறப்பே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading