Selvi Nithianandan

கவி அழகு

பொய் கவிபுனைந்து
மெய் வரி வடித்து
தாய் மொழி சிறந்து
தந்திடும் கவி அழகு

சந்தம் சிந்தி வரும்
எதுகை மோனை சேரும்
கவிக்கு எழில் கூடும்
கற்பனை கதை தேடும்

கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு இடை யழகு
விண்ணுக்கு உடு அழகு
மண்ணுக்கு பசுமை அழகு

கவிக்கு சொல் வனப்பு
புவிக்கு ஒளி சிறப்பு
கற்பனை தேடல் பிறப்பு
கச்சித கவி படைப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading