Selvi Nithianandan

புழுதிவாரி எழும் மண்வாசம்

புழுதிவாரி எழும் மண்வாசம்
புவனத்தில் வந்திடுமே தனிவாசம்
இருண்டு விடும் விண்ணும்
முழங்கி விடும் மேகமும்
ஏன் வருவாய் நீயும்
என்ன செவ்வாய் சொல்லு

மாமழையாய் வந்திடுவேன் மண்ணில்
மானிடமும் மழையாலே நனையும்
மனங்களும் மகிழ்ச்சியாலே துள்ளும்
மண்ணும் மனமுவந்து போகும்

ஈரமண்ணின் வாசம் ஈர்த்திடுமே உயிர்கள்
ஈரடிகவி போல இணைந்திடுமே பலவும்
ஈடு கொடுத்து பலஉயிரும் வாழுதே
ஈற்றில் பறவை கூட ஒருநாள் வருகுதே
ஏன் பறந்து வந்தாய் நீயும்
எதற்க்கு வந்தாய் சொல்லு
ஈசலாய் உயிர்பெற்று வாழுகிறேன்நானே
வந்த நாளே இறந்துடுவேன் தானே

சேவல் பேடு இணைந்திடுமே வாழ்வு
சேவகனாய் காவல் அரண்கூடு
சேறு சகதி அழைந்துதானே செல்வாய்
சேதி என்ன வென்று சொல்வாய்
சேற்றில் உள்ள பூச்சி புழு உண்ண
சேகரிப்பில் இருப்பதெல்லாம் வந்திடுமேமெல்ல

குவலயத்தில் புழுதிவாரி மண்வாசம்கூட
குறுங்கவியும் இப்போ பாடலாக மாறும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading