Selvi Nithianandan

நிலைமாறும் பசுமை (515) 12.05.2022

ஆரோக்கிய வாழ்விற்க்கு ஆதாரம்
அவனியிலே இப்போ சேதாரம்
ஆதி மனிதனிரின் அடையாளஅங்கம்
பாதி அழித்து விடை தேடிய பங்கம்

தானியங்கள் பழங்கள் காய்கறிகள்
தாதுப்பொருட்கள் இப்படியே கலப்படம்
உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்திலும்
உயருது புதிய நோய்களின் தாக்கம்

இயற்கையை அழித்து தேடும் செயற்கை
இதனாலே அழிந்து உருக்குலையும் மானிடம்
இலவசமாய் கிடைத்துவிட்ட விற்றமீனும் கூட
இப்போ இழந்துவிட்டு மருந்தினைத் தேடுது

காற்றோட்டமில்லா நாலுசுவருக்குள் வாழ்வு
கட்டிக்காக்கும் உயிரும் கைதிபோன்ற வலையில்
காலநிலைகூட சதிசெய்யும் நிலையில்
காசினியை பேணி கைகொடுப்போமே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading