Selvi Nithianandan

ஆற்றல்

ஆற்றல் என்பது
அவரவர் தனித்திறமை
ஆணிவேராய் பற்றி
அவனியில் திறமையானரே

ஆளுமை ஏற்ற
இறக்கமாய் பற்றிக்கொள்ளும்
அடங்கா மனிதரும்
தோல்வியை தட்டிக்கொள்வாரே

இலட்சியம் காணவே
இரவு பகல் கணியார்
இறுமாப்பாய் இறுதிவரை
எவருக்கும் பணியார்

ஆற்றல் இருபாலுக்கும் உண்டு
தூற்றல் துன்பம் எனக் கொண்டு
போற்றல் என்றென்றும் நன்றே
ஏற்றலாய் வெற்றி வாகை சூடியே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading