கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Vajeetha Mohamed

யோசி

மாய வீதியில் மானிடம்
மனிதம் சிதறிய வாழ்விடம்
நெஞ்சு சுமக்கும் பாவங்கள்
அழியாத் தழும்புக்குள்
மினுமினுக்கும் ௨யர்பிறப்பு
மனிதன்

வற்றிய என்விழிகளுக்குள்
ஈரம் கலந்த கு௫தி
மூன்று வயதுக் குழந்தையை
காமம் சிதைத்த காமூகன்
எதைக்கண்டாய் ஐந்தறிவைவிட
கேவலம் யோசி

பசித்தால் மட்டுமே வேட்டையாடும்
மி௫கம்
புசிக்காமல் வேட்டையாடும்
யுத்தச்சிதைவில் மனிதன்
மனிதா
யோசி இறங்கு வரிசையில்
மானிடம்
ஏறுவரிசையில் ௨யிரினம்

சாதி குலம் கோத்திரம் ஏனோ
தாழ்ந்தவன் கீழ்முறை விதியா
குடிநீரில் மனிதக்கழிவு கலப்பு சரியா
எந்த ஐந்தறிவாவது இப்படிச்செய்யுமா
யோசி மனிதா

ஆடையின்றிப் பிறந்தோம்
ஆணவம் அணிந்து திரிவோம்
மானிடம் மார்புதட்டிப் புகழ்வோம்
கேவலம் இச்செயல்கள் கலைவோம்
யோசி யோசி யோசிப்போம்

சாதிமதம்பாரா இயற்கை
போட்டி பொறாமையில்லா ஐந்தறிவு
௨லகையே இயக்கும் இறைவன்
எம்மை யோசிக்க வைக்கும்
ஆறறிவு யோசி தினம்தினம்
யோசி

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan