Vajeetha Mohamed

எதிர்ப்பு அலை

நீதி நியாயம் வரையறுக்கும்
புரட்சியாய் இதுவெடிக்கும்
தூக்கி எறியப்படும் பலதை
கூட்டி அள்ளவைக்கும் புரட்சி அலை

௨ரிமைகளை தட்டிக்கேட்கும்
நீதிக்காய் நிமிர்தெழுந்து நிற்கும்
எதிர்ப்பு அலையின் இளையவர்பரிணாமம்
கோட்டா கிராமம் புதுவரவு

ஈழம் ௨ங்கள் அப்பன் சொத்தா
குடும்பமாய் ஆழ தனியார் நிறுவனமா
௨ழைத்துவாழாமல் ௨ழைப்பில்
வாழும் பொறுப்பில்லா தலைமைகள்

இதனாலே எதிர்ப்பு அலை

திசையற்ற கடன்
திட்டமில்லா நடைமுறைகள்
சுரண்டல் எல்லாம் முதலீடாய்
சுகமாய் வாழ வெளிநாடாம்

இதனாலே எதிர்ப்பு அலை

பசிதீர்க்க வக்கில்லா அரசு
பாவங்கள் தி௫ம்பும் தராசு
இன மதம் இன்றி போராடும்
இளையவரைச் சிந்திக்கவைத்த
போராட்ட அலை

தூக்கி எறிய துணிவாய்
போராடும் ஆயுதம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading