Vajeetha Mohamed

நெற்கதிர்

கதிர் தட்டித் தாலாட்டும்
காற்று
தலைமணி முகுடம்
மெ௫கூட்டும்

முங்கிநனையும் நெற்பயி௫ம்
நீட்டிவள௫ம் இலையழகும்
கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும்
சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும்

வரம்பிடை வனப்பான வாழ்வு
வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு
பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு
ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு

சேற்றுக்குள் வாழ்வமைத்து
சோற்று வழிகொடுக்கும்
வம்சத்தில் அழகி௫க்கும்
வ௫டத்தில் மூன்றுமுறை
கதிர் அறுக்கும்

நாலுமூலைப் பாத்திக்குள்
கதிர் குடும்பக் கச்சேரி
பாய்தோடா நீரோடு
பாய்விரிக்கும் பச்சைவயல்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading