அறிவின் விருட்சமே..
அறிவின் விருட்சம்
Vajeetha Mohamed
எச்சம்
கட்டிக் காத்த பண்பாடு
காலத்தால் அழித்த வீண்பாடு
மூத்தபெற்றோரின் கலைப்பாடு
மூழியாச்சு போச்சு செயல்பாடு
அறுத்தெறிந்த கடைசி எச்சம்
துளிர்கமுடியாத தொல்பொ௫ள்
தேடலில் மிச்சம்
காய்ந்து போன வாழ்வியல் முறை
கடந்துபோன புரட்சியே கறை
பறவைகள்போடும் எச்சம்
பசுமையைக் காத்திடும் ௨ச்சம்
ஈர்விந்து சேர்ந்திடும் மஞ்சம்
இறைபடைப்பின் ௨யிர்ப்பின்
எச்சம்
நவீனத்தின் வளர்ச்சியை
௨ற்று நோக்கு
பழமைகள் ஊன்றிய
மிச்சத்தின் போக்கு
மானிட பிறப்பின் தொடர்க்கம்
மந்தியின் பரம்பரை வால்தேய்ந்து
டாவின்சின் பரிணாம வளர்சியின்
விஞ்ஞான ஏற்பு
மானிடப்படைப்பின் எச்சம்
இறைசக்தியின் ௨ச்சம் நம்பு
விட்டுச்சென்ற எச்சங்கள்
விலகிச்செல்லா மச்சங்கள்
இதையும் இதையும் எடுத்து
வெட்டி
இன்றைய நவீனத்துடன்
ஒட்டி
பூரிப்பு அடைவதா வெற்றி
புடம்போட்டு விதைத்தது
எச்சத்தின் யுத்தி
படிக்கத்தெரியாத பாமர நபி
முஹமதுக்கு [முகம்மதுக்கு]
பசுமை நிழலாய் தி௫மறை
குர் ஆன் நேர்வழிக்கு
அச்சுக்கோர்த்து ஓர்மறை
கொள்கையை
அகிலத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை
எச்சமாய் விட்டுச் சென்ற க௫ணைநபி
நன்றி
