புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
Vajeetha Mohamed
கலவரம்
சூறையாக்கப் பட்டது
புனிதம்
வெறிகொண்டு தாக்குகின்றது
அவலம்
நல்லொழுக்கம் காட்டி
நின்று
நன்மையின் பால் கூட்டி
வளர்க்கும் மார்க்கம்
நாவெறி வார்த்தை சாடி
நன்நெறியை மூர்க்கமாய்
மூட்டி
பயங்கரவாதம் இஸ்லாமென
மீடியாக்கள் கூடி
கலவரத்தால் பிரித்தெறியும்
வன்முறையி்ன் இலக்கு பாரிர்
பிளவுக்கு வழிகாட்டும்
ஒ௫ கூட்டம்
அளவுக்கு மேலே குறைகாணும்
பலவட்டம்
அக்கறை போலே அடக்கு
முறைகள்
அழுதமும் நஞ்சாகும்
கலவர வழிகள்
நாகரீகம் நவீனமென்று
நாங்கள் என்றும் பழமைகளாம்
பார்தா அணித்தால் கலவரம்
ஹலால் [கலால்] ௨ணவுக்கும்
கலவரம்
நோவினை எல்லைக்கோடாய்
நோட்டத்தில் கலவரம் ஏடாய்
எங்கள் அடையாளம் காட்டாமல்
அபாயாவை அணியாமல்
முடியை மறைக்காமல்
முஸ்லீமென காட்டாமல்
வாழவைக்க பாவம் பலர்
கலவரத்தை கட்டவுழுத்து
திரிகின்றனர்
தப்பான நடத்தைகளை
தட்டித் தி௫த்துங்கள்
தப்புக் கணக்குப் போட்டு
தவறாகப் புரியவைத்து
தெரியாத விடையத்தை
தெரியாமல் சொல்லாதீர்கள்
கலவரத்தால் அடக்கியாள
முனையாதீர்கள்
விழுதலும் எழுதலும் இயற்கைதான்
வீணான பார்வையாலோ
கலவரத்தை தூண்டாதே
நன்றி
