அன்னை

ராணி சம்பந்தர்

பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த இருப்பிடம் அன்னை

பாதந்தொட்டு வணங்கும் தாயே!
பத்து மாதக் கரு பிறந்து வளர்ந்து
தவழ்ந்து நடந்து பள்ளி சென்ற
பருவம் பூத்துத் துள்ளிய மனதில்

மணவறையில் கொட்டிய மேளம்
கட்டிய தாலியில் முட்டிய சொந்தம்
அதில் தானும் பிள்ளை பெற்ற
அன்னை பதவி உயர விருந்து
படைத்த உன் தாய்மடிக் கொழுந்து

பறித்து நட்ட மகள் மருமகள் எனப்
பல வடிவங்களில் ஒளியூட்டித்
தொடரும் அன்னையே வாழ்க .

Nada Mohan
Author: Nada Mohan