அவதி

ராணி சம்பந்தர்
அவதி அவதி அவதி எனும்
அவசரம் அவசரமாய்க்
கடுகதி ஏறிடத் துதி பாடும்
மானிடர் படும்பாடு பெரிய
பெரும்பாடானதே

கெதி கெதி எனும் கடுகடுப்புக்
கெடு குடுகுடுவென நுழைந்த
படபடப்பில் உருப்படாது போனது

மதி முட்டும் மன அழுத்தமதில்
சதியூட்டும் உயர் அழுத்தமதில்
கடகடவென உடனே செய்யாது
நாளை நாளையெனத் தள்ளிப்

போடும் சேதியில் முந்திய ஆர்வம்
கடுகடுப்பானது தவிர்க்கப் பஞ்சி
விடுத்து எஞ்சியதை அள்ளியே
அஞ்சாது அதைச் செய்து முடிக்க
நடுக்கம்,பயம் அற்றுப் போகுமே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading