இதெல்லாம் இப்ப எங்கே

இ.உருத்திரேஸ்வரன்

இரக்கம் மனிதாபிமானம் அதிகளவில்
இருந்த காலம் போய்
இப்ப எங்கே என்று தேட
முற்றாக ஒழியாமல் இருக்கிறதே நூலளவில்

மனித உரிமை தினம் என்று
கொண்டு வந்த ஐநா வே
உலகில் அழியும் உயிர்களை
பார்த்து கொண்டு இருக்கிறதே
தேட வேண்டும் மனிதாபிமானத்தை ஐநாவிலே

பதவிக்கு ஆசைப்பட்டு அரசுகள்
தம்மக்களையே போரினால் அழிக்க
தனக்கு தேவையானவர்களுக்கு ஒத்தூதும்
ஐநாவே தேவையா உனக்கு சபை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading