தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இருபத்தி எட்டாம் அகவை -63

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025

இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன் பாமுக தொலைக்காட்சியுமே..

சிந்தனையை பெருக்கிச் சென்றாய்
சிந்திக்க எமை வைத்தாய்
இளையோர், பெரியோர்
இணையக் காலம் கொடுத்தாய்

உலக நடப்பை எடுத்து வந்தாய்
ஊரின் சிறப்பை புகட்டிச் சென்றாய்
சொந்த ஆக்கம் தனைக்கொண்டு
சோர்ந்திடமால் தாய்மொழி வளர்த்தோம்!

தாய்மொழி வளர்த்த நீயவளே
தொடர்ந்து உம் பணி மிளிரட்டும்
மேலும் வளர்ந்து நன்றியோடு
மீண்டும் தொடர்ந்து பயணிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading