04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
“இலட்சிய வாதி”
நேவிஸ் பிலிப் கவி இல(494)
தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய்
கரைந்தாலும் காயாத கற்பூரமாய்
அணைந்தாலும் ஒளி சிந்தும்
சுடரொளியாய்
நெஞ்சங்களில் நிழலாகி
நினைவோடு சங்கமித்தாய்
இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
இன்று வரலாற்றில் வாழ்கின்றாய்
அகிம்சையே ஆயுதமாய்
இனமானம் உனதாக்கி
கனமான உள்ளத்தில்
தமிழீழத் தாகம் கொண்டாய்
மன ஒடுக்கம் நிதம் கொண்டு
உண்ணா நோன்பு நோற்று நின்றாய்
உடல் விட்டு உயிர் நீங்கும் வரை
மௌனமாய் போர் தொடுத்தாய்
தன்னலமற்ற செயல் பாடும்
உன் சுய அர்ப்பணிப்பும்
எமை மீட்டும் நினைவுகளாக -நீயோ
துளிர் விட்டு வளர்கின்றாய்
நன்றி,,,,,,,,,,
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...