பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

ராணி சம்பந்தர்

எப்பெப்ப ஜெனிவா கூடுமோ
அப்பப்ப தலைதூக்கும் சேதி
சொற்ப விடயம் வெளியில
மிச்சம் எச்சமோடு எச்சமாய்
மீண்டும் புதைந்திடும் சங்கதி

கச்சிதமா தொடங்கிப் பிச்சுப்
புடுங்கி மூச்சு முட்டி அடங்கி
உக்கினதைக் கிளறிக் கிளறி
வைச்சு வைச்சு நச்சினைத்
தைச்சுத் தைச்சுப் பொச்சடிக்க

இதுவரை கிடையாத ஒரு நீதி
அதுவரை கொந்தளிக்கும் அநீதி
கொதிக்கும் உள்ளமதில் மாண்டவர்
மீண்டும் தழைத்திடினும் எப்பவுமே
கிடையாத ஒன்று உயிர்க்குமா
சுவடுகள் என்பது கிடையாததே .

Nada Mohan
Author: Nada Mohan