11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
……கஞ்சா
மதிமகன்
……..கஞ்சா
———————
தலைக் கஞ்சா தலைவனும்,
தானைக் கஞ்சா சிப்பாயும்,
நிலைக் கஞ்சா நிலத்தோனும்,
நிம்மதி என்றும் இழப்பதில்லை!
மணாளனுக் கஞ்சா மனைவியும்,
மனைவிக் கஞ்சா மணாளனும்,
குணவானுக் கஞ்சா கொடூரனும்,
கூடிடில், கோணுமே நிம்மதி!
பெற்றோர்க் கஞ்சா பிள்ளையும்,
பெரியோர்க் கஞ்சா சிறியோனும்,
கற்றோர்க் கஞ்சா காடையனும்,
காசினியில் நஞ்சென வருமே!
அஞ்சுதற் கஞ்சா அறிவிலியும்,
ஆண்டவனுக் கஞ்சா அடியவனும்,
வெஞ்சமர்க் கஞ்சா வெறியோனும்,
வீழ்வதே பாரதன் விழுமியமாம்!
ஊருக் கஞ்சா உடையோரும்,
உணர்வுக் கஞ்சா உன்மத்தரும்,
போருக் கஞ்சா படையோரும்,
பொருதிடில், பூமியே துவளும்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...