ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம்
—————————————
வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய்
தருவாய் நலன்பல தந்து-கருவாகும்
நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட
நல்கிடுவாய் நற்சீர் நமக்கு

ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும் அறிவித்தார்
பார்போற்றப் பக்குவமாய் படிப்பித்தார் -ஏர்பூட்டி
ஏழ்மை தெரியாமல் ஏற்ற உழவனாய்
வாழ்வை வளமாக்கியும் வாழ்ந்து

பொங்கலும் பொங்க பகலவன் தோன்றிடவும்
சங்கும் முழங்கி சொந்தங்கள்-பங்கேற்கும்
சுவையான நாட்களும் சுதந்திரமாய் வந்தால்
இவையனத்தும் இன்பமாகும் என்று

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading