இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி

சரியெது பிழையெது யாரறிவார்
சூழலைச் சார்ந்தே விதிமுறைகள்
சூத்திரப் பொறிமுறை வரைவோர்கள்
பந்தியில் முந்தி படம் வரைவார்

நாளை என்பது நமதென்றால்
எண்ணிய யாவும் நிறைத்திடலாம்
நிலைத்திடும் கணத்தை நிலைப்பிடவே
முடியா மாந்தர்கள் வாழ்வின் நிலை

இற்றைக் கணமே உனதென்றால்
சட்டென முடிந்தவை செயல் கொள்வாய்
வாழ்வைத் தொலைத்து வனப்பெழுதும்
கனவுப்பயணம் நீளமில்லை

புரிந்தால் தெரிந்தவை தெரிவிலிட்டு
தேறிய பொழுதினை பயனெழுது

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading