கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கல்லறைகள் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025

ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!

சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
பறித்துப் போன கனவுகள்

கதறிய இனம் கண்டு
களம் கொண்டாய் அன்று
எந்த நாடும் அணுகவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை

கார்த்திகை வந்தாலே
கனத்த மாதமாய்
நெஞ்சம் பதறுது
நினைவுகள் புரளுது

வடுக்கள் பேசுது
கனவுகள் பலிக்கட்டும்
காந்தள் மலரெடுத்து
கல்லறைகள் தொழுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading