25
Jun
ஊக்கம் 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
வியாழன் கவிதை 1922!
நோக்கடா மானிடா…!
நோக்கம் கொண்ட மனிதா
நீ நோக்கிட எத்தனை விதமாய்
தேக்கிட எண்ணு தினமும்
ஆக்கிடும் அதனுள் பலதே..
வாக்கினைத் தருவாரும்
உளரே – வல்லவை
ஊக்கிட உதவுவாரும் சிலரே
ஏக்கமும் மெல்ல விலக்கு
ஏந்திட வேண்டுமே உழைப்பு..
பூத்திடும் நொடிகள் விரைவாய்
புனைந்திடு கனவினை உன்
நனவென யாவும் மாறும்
புவனமும் உன்னைப் போற்றும்..
உனக்கென இருப்பது உனது
அதைத் திருடிட யாரால்
இயலும்?- ஒரு நாள் உனக்கது
மெல்லவே புரியும் மானிடா…!
சிவதர்சனி இராகவன்
25/1/2024
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.