நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவந்த மே

சிவதர்சனி

தினக்கவி 1979..!

சிவந்த மே..!

உறவுகளின் உருக்கமான
குரல் ஒடுக்கப்பட்டது
உன்னத உயிர்கள் பலி
கொள்ளப் பட்டது
ஒன்றா இரண்டா ஆறிட
ஆயிரங்கள் பற்பலவாய்
ஓலங்கள் கேட்ட போதும்
உதவும் மனதோடு இல்லை
யாருமே அருகிலே
இன்றும் அந்த வடுக்களை
சுமந்தே வாழும் இதயங்கள்
காணாமல் போனோர்
நிலை தெரியாது தவிக்கும்
பெற்றோருக்கு எப்படித்தான்
ஆறுதல் சொல்லுவது
ஆண்ட இனம் அழிக்கப்பட
அல்லலுற்று உடல் சிதைக்கப்பட
போதும் இன்னும் வேண்டாமே
வேண்டும் குற்றத்துக்கு நீதியே..
சிவதர்சனி இராகவன்
16/5/2024

Nada Mohan
Author: Nada Mohan