பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

செல்லாக்காசு -77

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025

வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்

வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம் பாடியாய் கழித்தாள்
தலை முடியின் வெண்மை
தலைமுறையின் காலம் சொல்ல

கைத்தடியின் கைப்பிடிப்போ
காலத்தின் ரகசியம் உணர்த்த
மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு தொலைந்து
மௌனம் அரவணைக்க

செல்லாக்காசென மனம் தளர
சேகரித்த கதை கேட்போருமில்லை
காலச்சக்கரத்தில் முதுமையொரு வரம்
கலங்கலாமா அனுபவ பொக்கிஷம்!

Jeba Sri
Author: Jeba Sri