திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

தங்கம் மின்னும் ஒளியாய்

நகுலா சிவநாதன்
தங்கம் மின்னும் ஒளியாய்

பொங்கும் புதுமைக் கருத்தாளம்
பொலியும் உணர்வின் உயிரோட்டம்
தங்கத் தமிழின் அணியாவும்
தமிழை வளர்க்கும் நீரோட்டம்
சங்கத் தமிழில் கவிபாடி
சாற்றும் எங்கள் தாய்த்தமிழே
வங்கம் பெருக வருவாயே
வானளாவ உயர்வாயே!

எங்கள் மொழியே தாய்த்தமிழே
ஏற்றம் பெறுவாய் வையத்திலே
பங்கம் இல்லா பாரினிலே
படர்ந்தே உயர்வாய் மேதினியில்
தங்கம் மின்னும் ஒளிபோல
தரணி சிறக்கும் செம்மொழியே
சங்கம் வளர்த்து போற்றிடவே
சான்றோர் வகுத்த நன்மொழியே

நகுலா சிவநாதன் 1820

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading