நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு -212

தலைப்பு – மொழி

மொழியின் ஆரம்பம் சைகையில் பிறந்தது
மௌனங்கள் கலைந்து மதஇனம் பெருகியது
கலாச்சாரம் வரலாறு அடிச்சுவடு கூற
உருவான அதிசயம் உலக மொழிகளாம்.

தென் பொதிகையின் தென்றல் மொழி
கம்பன் கையினில் தவழ்ந்த மொழி
வள்ளுவன் வகுத்த வாழ்க்கை மொழி
பாரதியின் புதுமைப்பெண்னை உருவாக்கிய மொழி.

மொழிகளின் தாயகமாய் முச்சங்கம் வளர்த்த
இலக்கண ஆளுமையோடும் இலக்கியச் சுவையோடும்
வீறுநடை போடும் மொழியான செந்தமிழை
தாய்மொழியாய் அடைந்தது நான்பெற்ற பாக்கியமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
25/02/2023

Nada Mohan
Author: Nada Mohan