25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 295
11/02/2025 செவ்வாய்
“பங்கு நீ”
————-
அழகு நிலா வந்ததென,
அருகில் வந்து நின்றவளே!
பழகு தமிழ் பாவையென
பந்தம் பெருக்க வந்தவளே!
பங்கு நீயென அவன் பகர,
பாங்காய் ஏற்று நின்றவளே!
சிங்கப் பெண் எனப் புகழ,
சிலிர்த்து முகம் சிவந்தவளே!
அண்ணல் அவன் சீதைபோல்,
அன்பு கொண்டு அழைத்தவளே!
எண்ணம் நிறைய நிற்பவளே,
எழில் உருவான பெண்ணவளே!
திருமால் மனைவி திருமகளாய்,
தேவை உணர்ந்து அளிப்பவளே!
அருமை என்றெவர் புகழ்ந்தாலும்,
அடக்கம் கொண்டு மிளிர்பவளே!
சங்கம் வளர்த்த தமிழதுபோல்,
சந்தானம் செழிக்க வைப்பவளே!
பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன்
பாரினில் செய்த தவமென்ன!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...