திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன்

விந்தை மலர்கள்

மலரும் பூக்கள் மணக்கும் பொழுதில்!
நிலவும் வந்து நெஞ்சை மயக்கும்
அழகு விரிக்கும் அருமைப் பூக்கள்
பழகும் மனத்தைப் பற்றி யிழுக்கும்

இதழ்கள் விரிந்தே இனிமை பரப்பி
முதன்மைப் பூக்கள் முகிழ்க்கும் நாளும்
நிறங்கள் பலவும் நிறைவாய்க் காட்டித்
திறனை கூட்டும் திடமாய் பூக்கும்

இறையை வணங்க இனிய பூக்கள்
நிறைக! நிறைக !நெஞ்சம் தன்னில்!!!
உலகை வியக்கும் உாிமைப் பூக்கள்
விலகா சொந்தம் விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன் 1773

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading