அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன்
…. காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின் அறிவகம்
அரிச்சுவடி நூலகம்
பூண்டோடு அழிப்பதற்காய்
புத்தியற்றுச் சிதைப்பதற்காய்
தமிழினத்து வரலாற்றை
தகர்த்திட துணிந்தனர்
ஆகுதிக்கு இரையாக்கி
அறிவற்ற ஜிவிகளாய்
ஆதாரமற்ற தமிழர்களாய்
நிலைகுன்ற வைப்பதற்கு
அனலிட்டு ஆண்டுகள் 45-இன்று
தவிடு பொடியானதே
தமிழரினம் துடித்த கணம்
வெந்தணலின் வேதனையில்
வெந்தே வீறுகொண்டோம்
மீளமைப்பில் மிடுக்கானோம்
அன்று வைத்த தீ
இன்றும் எரி நெருப்பே
அகத்தின் குன்றிலே
அகலாத அவலமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading