அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகர் அன்னையேதான்
பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ!
புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள்
வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள்

கருவறையில் உயிர் தந்தவள்
காலமெல்லாம் காப்பவள்
கண்ணிமைக்கும் நேரமெல்லாம்
கனவிலும் பிள்ளையை சுமப்பவள்

உண்ணமறுக்கும் நேரமெல்லாம்
உணவூட்டி மகிழ்பவள்
உள்ளன்போடு சேயை காக்கும்
உணர்வு கொண்டவள் அம்மா!

அம்மா என்றால் ஆசை நெஞ்சில்
சும்மா சொல்லிட முடியுமா?
சுகமும் அவளே! சுந்தரமும் அவளே!
இகமும் அவளே! இன்னமுதும் அவளே!

நகுலா சிவநாதன் 1761

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading