அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்

மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு
சொல் வார்த்தை யில்லா பேரழகு
அள்ள அள்ளக் குறையாத விரிப்பு
ஆகாயம் எங்கும் முகில்களின் வனப்பு

பறவைகளின் பண்ணிசை தொடங்கும்
பாரெங்கும் ஒலிகளின் பரபரப்பு விரியும்
புதிய பாதைகளின் விழி திறப்பு
பூக்களின் மென்பட்டு இதழ் விரிப்பு

அமைதியின் ஓடத்தில் ஆழ்ந்தபிறப்பு
வாழ்க்கையின் முகிழ்ப்பில் ஓர்நாள்
மௌனமாய் விரியும் புதுப்புன்னகை
மகிழ்ச்சியில் துளிர்த்திடும் அமைதியின் விடியல்

நகுலா சிவநாதன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading