இயற்கை

நகுலா சிவநாதன்
இயற்கை

மழைத்துளி ஒன்று மண்ணில் விழ
மாட்சிமை பெறுமே மண்ணின் வளம்
அழைக்கும் மகவும் ஆனந்தம் பெற
அன்பே பரிணாமம் பெறுவதுண்டு

விரிக்கும் மலர்கள் இதழ்களை போலே
விந்தை மனிதர் நகைப்பதுமுண்டு
மரிக்கும் உயிர்கள் மண்ணினைத் தழுவ
மாண்புடன் வாழ்வியல் பண்புகள் பேசும்

மானுட வாழ்வியல் மந்திர குதிரை
காண்பவர் கருத்துகள் காலத்தின் வரவுகள்
தான்மட்டும் வாழாது பிறரை நேசிப்பவன்
தம்முயிர்போல் மன்னுயிர் காப்பவன்

நேசிக்கும் உறவுகள் நேசங்கள் பேணிட
சுவாசிக்கும் காற்றும் சுகமாய் வீசும்
வாசிக்கும் பழக்கம் வண்ணமாய் தோன்றிட
வாழ்க்கையின் மகிமைகள் வண்ணத்தேர் இழுத்திடும்

நகுலா சிவநாதன் 1834

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading