உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-09-2025

நல்லூர் வீதியிலே
நல்லைக் கந்தன் சாட்சியாய்
நாட்டுமக்கள் நலனுக்காய்
நாட்டினாய் ஐந்து கோரிக்கை

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

தியாகப் பயணத்தின்
பன்னிரெண்டாம் நாள்,
ஊர் கூடி அழுதிருக்க
உலகெல்லாம் பார்த்திருக்க

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
உண்ணா நோன்பிருந்து
உயிர்நீத்த மைந்தனே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading