நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

உனக்குள் ஒரு புது விடியல்

நகுலா சிவநாதன்

உனக்குள் ஒரு புது விடியல்

உன்றன் விடியல் உள்ளத்தில்
உணர்வாய் என்றும் துடிக்கட்டும்!
இன்பம் எழுதும் எழுதுகோலாய்
இறைவன் பாதம் தொடரட்டும்
வென்றே ஒளிரும் அறிவொளியாய்!
வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்!
நன்றே படைக்கும் இன்றமிழால்
நாளும் புதுமை பூக்கட்டும்!

உலகம் போற்றும் புதுவிடியல்
உனக்குள் பரவ முனைந்திடுவாய்!
நலமே போற்றும் நற்றிறனும்
நனவாய் ஆக உழைத்திடுவாய்!
திலகம் போலே மதிப்புடனே
திகழ என்றும் செயற்படுவாய்!
குலமே போற்றும் நல்வாழ்வு
குவியப் பாடு படுவாயே!

நகுலா சிவநாதன் 1762

Nada Mohan
Author: Nada Mohan