” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எதற்காக எதுவோ

ஜெயம் தங்கராஜா

கவி 738

எதற்காக எதுவோ

அட என்னடா இந்த பூலோக வாழ்வுள்
இது உழைப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆயுள்
இது பணத்தைக் கட்டாயப்படுத்தும் பசித்தவாழ்க்கை
உலகம் சுழற்றிவிடும் பணம்செய்யும் வாழ்க்கை

காலையில் தொடங்கிய ஓட்டம் மாலைமட்டும் ஆட்டம்
ஒரு நாளின் பெரும் பகுதியே இதைத்தேடியே நீட்டம்
அலைகிறார்கள் களைக்கிறார்கள் வீழ்கிறார்கள் வாழ்கிறார்கள்
கடவுளுக்குக்கூட உண்டியல்காசில்தான் உணவே ஊட்டுகின்றார்கள்

இதனால் மகிழ்ச்சியை வாங்கமுடியுமா ஆராய்ச்சிக்கு நேரமில்லை
மரியாதை நிறையவே கிடைக்கின்றது சாமிசத்தியமாக உண்மை
பாய்விரித்து படுத்தாலென்ன மெத்தையில் படுத்தாலென்ன
பணத்திற்கும் உறக்கத்திற்கும் சம்பந்தமில்லை முன்னபின்ன

பணப்பற்றாக்குறை தீமைகளை உருவாக்கிவிடும் அது பணப்பிரச்சினை
பணத்தை நிறைக்கும் பேராசை உணர்வை பழுதாக்கிவிடும் அது மனப்பிரச்சினை
இந்த எலும்புத்துண்டுக்காக நாயாக குரைத்து வாலாட்டும் கோலம்
பணத்துக்காக வாழ்க்கையும் வாழ்க்கைக்காக பணமும் என்பதாய்நாளும்

ஜெயம்
28-08-2024

Nada Mohan
Author: Nada Mohan