எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 246 “நிலாவில் உலா”.———/

“வான் நிலாவிலே உலவி வர ஒரு
வாய்ப்பு கிடைக்காதோ
தேன் நிலவை மீள மாங்குயிலுடன்
திகட்ட களிக்கேனோ.!”

“ஆகாயப் பந்தலில் பொன் ஊஞ்சலிலே நாம் ஆடிக் களிப்போமோ
தேய்கின்ற நிலா குறை என்னவள் நெற்றி திலகத்தால்
நிறைக்கேனோ!”

“வெண் மஞ்சலை நல்ல வித மஞ்சல் ஆக்கிடும்
வித்தையை செய்யேனோ
பொன் மஞ்சல் தன்போல
என்னவள் நிலவுக்கு
பூசிட செய்யேனோ!”

“வெண்மதி யிலும் களங்கம்
உண்டெண்ற சொல்லை
விலக்கிட செய்யேனோ
தண் மதி எங்கனும் தேடி அக்கறை எனும் குறையை கழுவேனோ!

“ஈழ தமிழ் கொடி எம் கொடி
அங் இனி எங்கும் பறக்க வைப்பேன்
ஆயுள் ஐயாயிரம் ஆன எம் பைந்தமிழ் அகிலத்தில்
ஒளிர வைப்பேன்.”

-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading