ஏமாளியாகாதே 68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-08-2025

ஏமாளியாகாதே தோழி
எதையும் தள்ளி வைக்காதே
தேனாய்ப் பேசி பலர்
தெருவிற்கு இழுத்து விடுவினம்

கண்டதையும் நம்பாதே
கண்மூடித்தனமாய் வாழாதே
அறிவுபூர்வமாய் ஆராய்ந்திடு
ஏமாற்றம் உன்னை அணுகாது

திண்ணிய நெஞ்சமும்
தெளிந்த நல்லறிவும் கொள்
தினமும் இறைவனை பிரார்த்தி
தீங்கு நினைக்காதே பிறர்க்கு

உழைப்பை உயர்வாய் நம்பிடு
ஊருக்குள் கொஞ்சம் உதவிடு
வலிமை கொண்டவள் நீ
வாழ்ந்திடு.. ஏமாளியாகாதே!

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading