முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

கமலா ஜெயபாலன்

நிலவில் உலா
இன்பப் பொழுது இதமான பருவம்
துன்பம் மறந்து துள்ளிய காலம்
இன்றும் எம்முள் இனித்திடும் நினைவு
அன்று கண்ட அருமை உறவுகள்

அன்னையின் மடியில் அமரந்து இருப்பதும்
தன்னை மறந்து என்னை அனைப்பதும்
புன்னகை பூத்து புதுக்கதை சொல்வதும்
அன்னம் ஊட்டி அகமும் மகிழ்ந்ததும்

கிட்டி யடிப்பதும் கிளித்தட்டு மறிப்பது
பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஒளிப்பதும்
முட்டி கட்டி முந்தி யடிப்பதும்
சட்டியில் குழைத்து சாதம் உண்பதும்

பாடிக் கொண்டு பம்பரம் சுற்றுவதும்
ஆடிவரும் நிலவில் ஔவையைக் கண்டதும்
தேடி நிலாச்சோறு தின்று களித்ததும்
ஓடி வரவேண்டும் ஒருநாள் எமக்கு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading