17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
கீத்தா பரமானந்தன்
நடிப்பு !சந்தம் சிந்தும்சந்திப்பு
கள்ளமே உருவாய்க் கணமெலாம் அரங்கேறிக்
காலமும் தொடரும் காத்திரமாம் படைப்பு!
உள்ளத்தை மறைத்து உதட்டின் பசப்பால்
உணர்வினை வாட்டும் ஒப்பற்ற நடிப்பு!
மேடைகள் இன்றே மிளிர்கின்ற வனப்பு
மேதினி மனிதரின் மேலாம் வரிப்பு!
சோடையே யின்றிச் சொரிகின்ற பரிவில்
சொருகுறார் வாளினை சொடிக்கிடும் நொடிக்குள்!
நாளிலும் பொழுதிலும் நரித்தனம் நிறைப்பு
நம்பியே வீழுதல் நலிவற்றுத் தொடர்வு!
ஆறறி வென்றுமே. அனுதினம் பசப்பு
ஆற்றிடும் செயலதோ ஆழக்குழி பறிப்பு!
ஒட்டியே அழிக்கும் ஒட்டுண்ணி போலே
ஒன்றியே புதைக்கும் ஓங்கிய நடிப்பில்
பட்டமே வாங்காப் பண்டிதர் என்றே
பச்சோந்திக் கூட்டம் பரவியே நின்று
சத்தமே இன்றி வீழ்த்துவர் நொடியில்
சாதனை காணாச் சரித்திர நடிப்பில்!
கீத்தா பரமானந்தன்
03-05-2023
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...