“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440)

புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள் பூக்க
பாசமெனும் பாலூற்றி
வளர்த்தெடுப்போம்

அன்பெனும் கொடியைத் தோளேற்றி
உணர்வுகள் ஓர் வழிப் பட
நன்நெறிகள் துளிர்க்க
நேர் வழியில் நடந்திட

உறவுகள் சரிப் படும்
இறுக்கம் தளர்ந்து
நெருக்கம் நிகழும்
மனதும் மகிழும்

உறவு மெய்ப்பட
உரிமை கை கொடுத்தால்
உறவுகள் சிறக்கும்
சிறகுகள் விரியும்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading