முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சக்தி சக்திதாசன்

கண்களை மூடிக் கொஞ்சம்
கனவுலகில் மிதந்து வர‌
நெஞ்சிலொரு ஆசையடி
நினைவுகளின் ஓசையடி

நேற்றைகளை மறந்து
நாளைகளைத்  துறந்து
இன்றைகளில் மகிழ‌
ஏங்குதடி இதயம்

எண்ணங்களின் சுமைகள்
பஞ்சாகிப் பறந்து விட‌
எஞ்சியுள்ள நினைவுகள்
தேனாகி இனித்துவிட‌

உருளுகின்ற உலகத்தில்
புரளுகின்ற நிகழ்வுகள்
துணையாக வேண்டுமென
‌கெஞ்சுதடி என் மனமே

வண்ணங்களின் துணையோடு
வானவில்லின் மீதேறி
வளைவான வழியூடு
விரைந்துவிட என்நெஞ்சம்
வீறு கொண்டு எழுகிறதே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading