” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு!
என் அப்பா!
அறுசீர் விருத்தம் – சீர் வரையறை: மா மா காய்/ மா மா காய்
குடும்பத் தூணாய் இருந்தாரே
குலம் விளங்க வாழ்ந்தாரே
துடுப்பு வலித்த தலைவரானார்
துயரம் எதுவும் கொள்ளவில்லை
கடுப்பு மிக்க ஆசானாய்
கண்டிப் புடனே கல்வியையும்
கொடுத்து மகிழ்ந்த ஆசிரியர்
கடமை கண்ணி யமாய்க்கொண்டே!
எடுத்த முயற்சி நிறைவுசெய்தார்
எல்லோர் மனமும் வாழ்த்தியதே
அடுத்த வருமே வாழ்ந்திடவே
ஆலை ஒன்றை நிர்வகித்தார்
உடுக்க உடைகள் நெய்தாரே
ஊரில் உள்ளோர் வியந்தாரே
எடுத்தார் முயற்சி இளமையிலே
எண்ணம் எல்லாம் வென்றாரே!
கடுமை உழைப்பை அவரிடமே
கற்றுக் கொள்ள நல்ஆசான்
நெடிய தூரம் வந்தேன்நான்
நேரே பார்க்க முடியவில்லை
கொடுமை செய்த பாவியானேன்
கொடிய கூற்றன் அழைத்தானே
அடுத்த பிறப்பில் அவருக்கே
ஆசை மகளாய்ப் பிறந்திடணும்!
அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக!

கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கும் திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அனைத்து கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan