சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

நகுலா சிவநாதன்

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

சாரல் மழையும் சாதிக்க துடிக்கும்
சாதனை அதற்குள் வந்துவிட்டால்
சோதனை செய்து தொழில்பட முனையும்
சொர்கமும் காணும் சொந்தமும் தேடும்

முயற்சி யென்ற முனைப்புக்குள்
முந்தும் செயலும் விந்தை புரியும்
சிந்தும் வரமாய் சிறகுக்குள்ளே
சந்தம் வருமே சாதிப்பும் நிகழும்

பந்தம் தொடரும் வாழ்வும் இங்கே
பயனும் அளிக்கும் படிப்பும் நல்கும்
வெந்த புண்ணில் வேலும் பாச்சும்
சொந்த அறிவு மங்கி விட்டால்…….

நகுலா சிவநாதன் 1824

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading