சிவாஜினி சிறீதரன்

சந்த கவி
இலக்கம் _148

“நீர்மூலம்”

எங்கள் வாழ்வில்
மறக்க முடியாத
மறுக்க முடியாத நாள்!

பல குடும்பங்களில் நீட்சியாக
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
மருமக்கள் என விடுதலைக்கு விதையாகி போன நாள்!

ஈழ தமிழர் சாம்ராச்சியத்தில்
நாம் வாழ்ந்த காலத்தில்
அழிக்கப்பட்டது ஒழிக்கப்பட்டது நீர்மூலம்
ஆக்கப்பட்டது!
இனப்படுகொலை
போர் குற்றம்
இரசாயனக் கொண்டுகள் பயன்படுத்தி
நயவஞ்சகமாக இடித்து எரித்து அழிக்கப்பட்டதை கண்ட
கையறு நாள்!

வீரம் விவேகம்
விடுதலையின் தாகம் தீயாகம்
சுதந்திரம் சுயனலமற்ற
விலைபோகாத தன்னிகரில்லா
தலைவனையும்
ஈகையரையும் இளந்த நாள்!

தன் உயிரிலும் மேலான
தாய் நிலத்தை காதலித்து
இந்த மண் எங்களின் சொந்த மண்
அந்த மண்ணில்
நித்திய இளைப்பாறி
காவல் தெய்வங்களையும் பொதுமக்களையும் நீர்மூலமாக்கிய நாள்!

எங்கள் சொத்துக்கள்
சொந்தங்கள்
முதுசங்களை தோப்புக்களை தோண்டி
பாட்டியின் பாக்குரல் வரை
சிங்கள கைக்கூலிகளால் கையாளப்பட்ட் நீர்மூலம் ஆக்கிய நாள்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
18.05.24

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading