சிவா சிவதர்சன்

[ வாரம் 218 ]
“சுடர்”

அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும்
ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும்
அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும்
ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து விளங்கிடுமே

மதங்களின் தோற்றம் மனிதமனங்களின் இருள்போக்கும்
மதவழிபாடுகள் ஆன்மீக ஈடேற்றம் அதன் நோக்கம்
மதச்சடங்குகளில் சுடர் ஏற்றல் அதன் விளக்கம்
மதங்களில் இடம்பெறுமா இருட்டினில் அரங்கேற்றம்?

சுடரொளி வீசி மெழுகுவர்த்தி தன்னையே மாய்க்கும் இடரினும்தளரா மனஉறுதியில் ஆகுதியாகும் பொதுநலம்
இனம் வாழ தன்னுயிரீந்த ஆயிரம் தியாகச்சுடர்கள்
மனம் வாழ்த்தும் மாவீரர் விண்ணில் ஒளி வீசும் ஈகைச்சுடர்கள்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading