சிவா சிவதர்சன்

வாரம் 203
“மார்கழி”

வருடம்,மாதங்கள் இயற்கயின் பருவகாலக் கோலங்கள்
மழையும் குளிரும் மிகுந்த மாரி உலகை வருத்தும் காலங்கள்
முடிவு தரும் மார்கழி-சீதேவியின் பிறப்பால் வரும் மாற்றங்கள்
தாங்கொணா துன்பங்கள் தாங்கிய மகிழ்வால் துள்ளும் உள்ளங்கள்

மண்ணீரம் காக்கும் பயிர் வளம் பெருக்கும் உயிருக்கு உணவூட்டும்
வாழவளங்கொடுக்கும் மார்கழி,பெற்றதாயை நினைவூட்டும்
சுனாமியும் சூறாவளியும் மார்கழியில் சீற்றத்தை நிலைநாட்டும்
குற்றம் புரிந்தவர் சுற்றமானாலும் நிச்சயம் தண்டிப்பை அறிவூட்டும்

திருப்பள்ளிஎழுச்சி பாடி இறைவனை துயிலெழுப்புவதும் மார்கழியே
திருவெம்பாவை இசைத்து மங்கையர் நலம் பேணுவதும் மார்கழியே
ஒருவனே தேவன் என உணர்ந்த நத்தார் கொண்டாடுவதும் மார்கழியே
மானுடபேதங்கள் மறைந்துபோக நல்வழி பல காட்டும் மார்கழி மாதாவே நீயென்றும் வாழியவே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading