சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்3
இப்போதெல்லாம்
மரங்களின் நிழல் எங்கே
மஞ்சள் பூசிய முகம் எங்கே
கூட்டு குடும்பம் எங்கே
குதூகல சிரிப்பு எங்கே
பாட்டி வீட்டு பலகாரம் எங்கே
பசுமையான காட்சிகள் எங்கே
குளிர் காற்று எங்கே
கூட்டமாய் பறக்கும் பறவைகள் எங்கே
தாத்தாவின் கதைகளா எங்கே
தவளையின் சத்தம் எங்கே
நல்ல தூக்கம் எங்கே
நாட்டியமும் வாத்தியமும் எங்கே
நல்ல நண்பர்கள் எங்கே
நல்ல மனங்கள் எங்கே
இப்பொதெல்லாம் காணவில்லையே
சுமித்ரா தேவி
கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading