சுமை

சுமை
செல்வி நித்தியானந்தன்

கருவின் சுமை
தாங்கிடும் மகிழ்வு
உருவாய் வந்திடும்
உவகையின் பிறப்பு
தருவாய் வளர்ந்திடும்
விழுதின் அழகு
தரணியில் மிளிர்திடும்
தோற்றமும்.சிறப்பு

பற்பல சுமைகள்
தாங்கிடும் தன்மை
பக்குவம் கண்டு
பளுவை விலத்து
பாரினில் சுமையும்
படிப்படி தேர்வு
பயத்தை மறந்து
மகிழ்வாய் நிமிர்வு

மூப்பினை எட்டவே
பயத்தினை தருகுது
மூட்டும் மூச்சுமம்
சேர்ந்தே பிசகுது
சுமையும் தாங்கி
சுமந்து செல்ல
சுதந்திற பறவை
தேடுதே உலகை

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading