ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.07.2023
இலக்கம்-228
பாட்டி
—————
ஒளவைப் பாட்டி அமுதாய் பொழிந்தா அமுத மொழிகள்
அம்மா தந்த பாட்டி
வடை சுட்ட கதை அழகாய் கூறும்
தெய்வ பாட்டி
மானிப்பாயில் பிறந்து
நெடுந்தீவில் வளர்ந்து
பிரிந்து
எம்மோடு கூட இருந்து
வாழ்ந்த பாட்டி
சேலைத் தலைப்பினிலே சில்லறை முடித்து வைத்து
தோடம்பழ இனிப்பு வாங்க 5,10 சதம் தந்திட்ட பாட்டி
தலைவாரி பின்னி விட்டு அழகு பார்த்து சிரிக்க
விழுந்து விழுந்து சிரித்து மகிழும் பாட்டி
கொட்டை பெட்டியில் தாம்பூலம் வைத்து
வெற்றிலை காம்பு முறித்து சப்ப தந்த பாட்டி
பஞ்சுத் தலையை முழுக வைத்து ஈரம் துடைத்து
வெள்ளை உடை அணிந்து மகிழ்வு அடைந்த பாட்டி
கடைசி வரை அன்புடன் வாழ்ந்து ஆறுதலாய் அடங்கிய பாட்டி
இறைவன் அடியில் அமைதியில் உறங்கும் பாட்டி
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading