தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : ‘ இப்போதெல்லாம் ”

சந்திப்புக்கள் இப்போதெல்லாம்
சடங்குகளில் மட்டும் தான்
குடும்பத்தில் ஒருதலை
தலை காட்டி கை குலுக்கல்
மட்டும் தான்
விருந்தோம்பல் இப்போதெல்லாம்
வீதியோர விடுதியில் தான்
முன்பதிவும் அளவு சாப்பாடும்
தலைமுறைக்கு தக்க படி
தனித்தனி அட்டவனைதான்

பெயர் சொல்லி அழைக்கையிலே
பெரியவா சின்னவா பேதம்
தெரியவில்லை
உறவு முறை அறிந்து கொள்ள
அகராதி தேடுகிறோம் இப்போதல்லாம்.

திருமண விழாவும் தேர் உலாவும்
பாரம்பரிய காட்சியெல்லாம்
சூழ்நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு
தொழில் நுட்பம் ஆகியாச்சு
போதும் போதும் இப்போதெல்லாம்
புலம் பெயர் நகர்வு வாழ்க்கை தான்!!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading