தடமது படைத்தெழும் தனித்துவம்

சுமித்ரா தேவி (மித்திரா

கவிதை இலக்கம் 15
தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம்

திடமது தந்திடும் மனமதில்
கடமென ஒலித்திடும் இசையது
மடையென உடைத்தெழும்
நீர் நிலை-நம்
மனமது கழித்திடும் அன்பது
நிறமுடன் கற்றவை அறம் ஆவதும்
வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர்
தடமென விளைவதுதான்
உணர் கண்டதே
படமென விரிவதும்
பார் எமை அணைப்பதும்
தடமென படைத்தெழும் தனித்துவமே
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading